Page Loader
தமிழக பள்ளி ஆண்டு விழாக்களில் இவற்றிற்கு தடை: பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு
திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு தடை

தமிழக பள்ளி ஆண்டு விழாக்களில் இவற்றிற்கு தடை: பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2025
08:26 am

செய்தி முன்னோட்டம்

அரசு பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு தடை விதித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில்: "கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகிலுள்ள சோப்பனூர் அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழாவில் ஐந்து மாணவர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளனர். ஒரு மாணவர் வீரப்பன் திரைப்படத்தின் டி-ஷர்ட் அணிந்தும், இரண்டு மாணவர்கள் அரசியல் கட்சியின் துண்டுகள் அணிந்து நடனம் ஆடியதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இனி திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவது, ஜாதி சின்னங்கள் வைத்திருப்பது போன்றவை கடுமையாகத் தடை செய்யப்படும். இவ்வாறான புகார்கள் வந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post