பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு
தனியார் பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளுக்கு அதிகரித்துவரும் பாலியல் தொல்லைகளை தடுக்க பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஜிபிஎஸ், சிசிடிவி கருவிகள், பெண் அட்டெண்டர் உள்ளிட்ட பல பாதுபாப்பு நெறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, அதாவது, அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், 10 ஆண்டுகள் அனுபவத்துடன், உரிய கனரக வாகன ஓட்டுநர் உரிமமும்பெற்றிருக்க வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காவல்துறை சான்றும், மருத்துவ தகுதிச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தினசரி Breath Analysis மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பிடத்தக்க சில பாதுகாப்பு அம்சங்கள்
புத்தகப் பையினை பாதுகாப்பாக வைக்க இருக்கையின் அடியில் போதிய இடவசதி வேண்டும். வாகன ஜன்னல்களில் திரைகள் கூடாது. அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள Panic Buttons பொருத்தப்பட வேண்டும். பள்ளி வாகன உட்புறத்தில் எளிதில் மாணவர்களின் பார்வையில் தெரியும் வகையில் அவசர கால உதவி எண்களான '14417' மற்றும் '1098' குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புகார் பெட்டியில், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி வெளிப்படுத்த வேண்டும். அந்த புகார்களின் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்களில் செல்லும் மாவணவர்களுக்கு, வாரம் ஒருமுறை பெண் ஆசிரியர்களை கொண்டு கூட்டம் நடத்தி பாலியல் குற்றங்கள்,வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது, வாகனத்தில் புகைபிடித்தல் போன்ற நிகழ்வுகள் குறித்து கேட்கப்பட வேண்டும்.