Page Loader
ஸ்மார்ட் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அப்டேட்
ஸ்மார்ட் ரேஷன் கார்டு

ஸ்மார்ட் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அப்டேட்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2024
08:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வேண்டும் என விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் பேருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அட்டைகள் வழங்காமல் தாமதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாமக தலைவர் ராமதாஸும் இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ரேஷன் அட்டைகள் தாமதமாவதன் காரணத்தை அமைச்சர் சக்கரபாணி அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 2023 ஜூலை முதல் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணி மற்றும் ஏற்கனவே அச்சடிக்கும் நிலையிலிருந்த குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை குறிப்பிட்ட அமைச்சர், அனைவருக்கும் விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை