Loading...
NHAI பாணியில் களத்தில் இறங்கும் தமிழக நெடுஞ்சாலைத் துறை; 24 மணி நேரத்தில் ரோடு குழி மூடப்படலனா கடும் அபராதம்
நெடுஞ்சாலைத் துறை முதன்முறையாக செயல் திறன் அடிப்படையிலான நெடுஞ்சாலைப் பராமரிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது

NHAI பாணியில் களத்தில் இறங்கும் தமிழக நெடுஞ்சாலைத் துறை; 24 மணி நேரத்தில் ரோடு குழி மூடப்படலனா கடும் அபராதம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
05:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செயல்பாடுகளைப் பின்பற்றி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை முதன்முறையாக செயல் திறன் அடிப்படையிலான நெடுஞ்சாலைப் பராமரிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, நகரச் சாலைகளை பராமரிப்பதற்கான குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களைக் கோரியுள்ளது. இக்குறுகிய காலப் பராமரிப்பு ஒப்பந்தங்களின் காலம் 6 மாதங்கள் ஆகும். இத்திட்டத்தின் கீழ், மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் குழிகள் 24 மணி நேரத்திற்குள் கட்டாயமாகச் சரிசெய்யப்பட வேண்டும். தவறினால் ஒப்பந்ததாரருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விதிமுறைகள்

நீண்ட கால ஒப்பந்தங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு

சாலை பராமரிப்பில் தொடர்ச்சியாக குளறுபடிகள் நிகழ்ந்து, ஒப்பந்ததாரருக்கு 3-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டால் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நகரச் சாலைகளுக்கான இக்குறுகிய கால ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நீண்ட காலப் பராமரிப்பு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசின் இந்த அதிரடி மற்றும் நவீன பராமரிப்பு நடவடிக்கையால் மாநில நெடுஞ்சாலைகளின் தரம் பெருமளவில் உயருவதோடு, சாலைப் பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளும் உயிரிழப்புகளும் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT