Page Loader
புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய தகவல்
கடந்த ஒரு ஆண்டாக புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டது

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
May 24, 2024
01:58 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு மகளிருக்கான உரிமை தொகை, வெள்ள நிவாரணம் உட்பட பல உதவிகளை குடும்ப அட்டை இருப்பவர்களுக்கு வழங்கியதை தொடர்ந்து, தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பங்களும் அதிகரித்தன. விண்ணப்பங்கள் அனைத்துமே பரிசீலிக்கப்பட்டு உரியவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டாக புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் அட்டை வாங்க முடியாத நிலை இருந்தது. இதுவரை, கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

embed

தமிழக அரசின் முக்கிய தகவல்

#BREAKING | மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்#SunNews | #Rationshop | #Elections2024 pic.twitter.com/CcoXnlY85o— Sun News (@sunnewstamil) May 24, 2024