Page Loader
இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம்
விரைவில் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2024
05:13 pm

செய்தி முன்னோட்டம்

தற்போது வரை அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே இலவசமாக செலுத்தப்பட்டு வந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, இனி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கும் வகையில் விரைவில் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவிக்கையில், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை மொத்தமாக 16 தவணை தடுப்பூசியை இனி குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளதாக கூறினார். இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், விரைவில் இந்த திட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொடங்கி வைக்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தடுப்பூசி இலவசம்