
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
செய்தி முன்னோட்டம்
தை பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடுகளும் வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள்:
ஜல்லிக்கட்டு விளையாடும் போது ஒரே நேரத்தில் 2 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி.
மாடுபிடி வீரர்களும் பார்வையாளர்களும் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
அந்த சான்றிதழ்கள் 2 நாட்களுக்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
மாடுபிடி வீரர்களும் பார்வையாளர்களும் 2 கொரோனா தடுப்பூசிகள் கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும்.
பார்வையாளர்கள் இருக்கை 50% மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தபட வேண்டும்.
காளைகள் அவிழ்த்துவிடப்படுவதில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
ட்விட்டர் அஞ்சல்
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறை முழு விவரம்:
#BREAKING | ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு#Jallikkattu | #TNGovt | #Pongal pic.twitter.com/2ltzLQl3Db
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 6, 2023