
அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்: தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதில், அனைத்து அரசாணைகள், சுற்றறிக்கைகள், மற்றும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைத் தலைமை அலுவலகங்கள் முதல் அரசு அலுவலகங்கள் வரை அனுப்பப்படும் கருத்துரைகள், உத்தரவுகள், மற்றும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.
விலக்கு அளிக்கக்கூடிய சில விசேஷமான நிலைகளைத் தவிர்த்து, அனைத்து ஆவணங்களும் தமிழில் தயாரிக்கப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஒவ்வொரு இனத்திலும் தமிழில் கையொப்பமிட வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக பின்பற்ற அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு#SunNews | #Tamil | #TNGovt pic.twitter.com/a7pbeH1pSU
— Sun News (@sunnewstamil) April 16, 2025