ஆதார் கார்டில் கைரேகை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் மறுப்பா? தமிழக அரசு கூறுவது என்ன?
செப்டம்பர் 15 உடன் இலவசமாக ஆதார் அட்டை புதுப்பிதற்கான கடைசி தேதி நிறைவடைகிறது என UIDAI அறிவித்துள்ளது. இந்த சூழலில், இணையத்தில், ஆதார் அட்டை கைரேகை புதுப்பிக்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என செய்திகள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் பதட்டமடைந்தார்கள். இந்த சூழலில் தமிழக அரசு அந்த செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, "ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. ஆதார் அட்டை புதுப்பிக்கும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்."