
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான கோப்புகளை திருப்பியனுப்பிய தமிழக ஆளுநர்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜூன்.,30ம்தேதி தனது பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற சைலேந்திர பாபுவை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்து அதுகுறித்த கோப்புகளை ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் அக்கோப்புகளை ஆர்.என்.ரவி தற்போது திருப்பியனுப்பியுள்ளார்.
தொடர்ந்து, இப்பதவியில் இருப்போர் 62 வயதில் ஓய்வுப்பெற வேண்டும். ஆனால் அவருக்கு தற்போது 61 வயதாகிறது.
இதன்மூலம், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலை தமிழகஅரசு பின்பற்றவில்லை என்பது தெரிகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த நியமனம் குறித்த தகவல் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டதா?என்று கேள்வியெழுப்பியுள்ள அவர்,
இந்த நியமனத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்குமாறும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தமிழ்நாடு உயர்கல்வியின் மாதிரி பாடத்திட்டத்தினை பின்பற்றவேண்டிய அவசியமில்லை என்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஆளுநர் ரவி மறுப்பு
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் - ஆளுநர் ஒப்புதல் மறுப்பு? pic.twitter.com/GB8BJnhk4Q
— @JuniorVikatan (@JuniorVikatan) August 22, 2023