LOADING...
FACT CHECK: வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை, அது வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அது வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

FACT CHECK: வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை, அது வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2025
03:11 pm

செய்தி முன்னோட்டம்

"பிரதமர் மோடி அறிவித்ததால் ஜூன் 6 அன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை செயல்படாது" எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் வழங்கி, இது முற்றிலும் வதந்தி என அறிவித்துள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில்,"வெள்ளிக்கிழமை (ஜூன் 6, 2025) பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்ற தகவல் தவறானது. இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலி செய்தி ஆகும். இதுபோன்ற எந்தவிதமான அறிவிப்பும் ஒன்றிய அரசால் வெளியிடப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வழங்கிய தகவலின்படி, 06.06.2025 வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post