உலக சாதனை! வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தோல்வி
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான கிளைமாக்ஸ் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் அரங்கேறியுள்ளது. 2006-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று, அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) புதுமுக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். வெறும் ஒரு வாக்கு வித்தியாசம் என்பதால், வாக்கு எண்ணும் மையத்தில் திமுக முகவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமைச்சரின் இந்தத் தோல்வி சிவகங்கை மாவட்ட திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டை
அமைச்சர் பெரியகருப்பனின் கோட்டையில் விரிசல்
திருப்பத்தூர் தொகுதி பல தசாப்தங்களாக திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டது. இங்கு 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமைச்சராகப் பதவி வகித்தவர் கே.ஆர்.பெரியகருப்பன். அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை, அரசியலுக்குப் புதியவரான தவெக வேட்பாளர் வீழ்த்தியிருப்பது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 28 சுற்றுகள் வரை முன்னிலையில் இருந்த அமைச்சர், இறுதி நேரத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 29 சுற்றுகள் முடிந்த நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் 30 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். கடைசிச் சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபோது, தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி அமைச்சரை முந்திச் சென்றார். தவெக: 83,227 வாக்குகள் திமுக: 83,226 வாக்குகள் வெற்றி வித்தியாசம்: 01