Page Loader
ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர்
இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்பெயினில் துவங்கவுள்ளது

ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 29, 2024
09:31 am

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்பெயினில் துவங்கவுள்ளது. இந்த மாநாட்டில், தலைமை தாங்க முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார். தமிழக தொழில்துறை அமைச்சர் TRB ராஜாவும் இந்த பயணத்தில் உடன் சென்றுள்ளார். 2030க்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது எனவும், ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது எனவும் பயணத்திற்கு முன்பு, முதல்வர் பேட்டி அளித்தார். இந்த மாநாட்டில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு