மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்
மதுரை புதுநத்தம் பகுதியில், ரூ.114 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் ரூ.10கோடி புத்தகங்களுக்கும், ரூ.5கோடி தொழில்நுட்ப உபகரணங்களுக்கும், செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நூலகம் கட்டும் பணியானது கடந்தாண்டு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளநிலையில், கீழ்தளத்தில் பார்க்கிங் வசதியுடன் இந்நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவையுள்ளது. இந்த நூலகத்தின் நுழைவுப்பகுதியில் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. மின்தூக்கி, எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளும் இந்த நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 4ம் தளத்தில் மாடித்தோட்டம் அமைத்து அங்கு அமர்ந்து புத்தகம் படிக்கக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய உலகத்தரம் வாய்ந்த நூலகத்தினை வரும் 15ம்தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.