
நிதியமைச்சரின் ஆடியோ விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
செய்தி முன்னோட்டம்
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றினை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தார்.
அந்த சர்ச்சை மிகுந்த ஆடியோ பதிவில் நிதியமைச்சர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும் இணைந்து ரூ.30,000 கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த ஆடியோ குறித்து அண்ணாமலை விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த நிதியமைச்சர், அந்த ஆடியோவில் வரும் குரல் தனது இல்லை என்றும், இது புனரமைக்கப்பட்ட ஆடியோ என்றும் கூறியிருந்தார்.
நிதி
மட்டமான அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார் மு.க.ஸ்டாலின்
மேலும் பேசிய அவர், தன்னையும் முதல்வரையும் பிரிக்கவே இவ்வாறு சதி செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து நவீன தொழில்நுட்பம் கொண்டு பல்வேறு தலைவர்கள் பேசியதை எப்படி எல்லாம் மாற்ற முடியும் என்பதை விவரிக்கும் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டார்.
இந்த விவகாரம் குறித்து 2 முறை அவர் முதல்வரையும் சந்தித்தார்.
இந்நிலையில் இன்று(மே.,2)நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த ஆடியோ விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதிலளித்துள்ளார்.
'உங்களில் ஒருவன் பதில்கள்' நிகழ்வில் இதுகுறித்து கேட்டபொழுது, இதுதொடர்பாக பழனிவேல் தியாகராஜனே இரண்டு முறை விளக்கம் அளித்துவிட்டார்.
மக்களுக்கான பணியினை செய்யவே எனக்கு நேரம் சரியாக உள்ளது.
இது பற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.