NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    எழுதியவர் Nivetha P
    Apr 08, 2023
    02:26 pm
    சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    பிரதமர் மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8)சென்னைக்கு வருகை தந்து ரூ.2,467கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான முனையத்தினை சென்னை விமானநிலையத்தில் திறந்து வைக்கவுள்ளார். இவரது சென்னை பயணம் காரணமாக இன்று பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இவரை வரவேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் விமான நிலையம் செல்கிறார்கள். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் உடனிருப்பர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல் வந்த நிலையில், அக்கட்சியின் பிரமுகர்களை காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளது. வாகனத்தணிக்கை மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேரடியாக செய்து வருகிறார்.

    2/2

    பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

    இந்நிலையில் சென்னை வரும் மோடியினை சந்திக்கவுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மோடியிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி அந்த மனுவில் நீட் தேர்வு விலக்கு, நிலக்கரி விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை மசோதா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஸ்டாலின் அவர்கள் மோடி பங்கேற்கும், விமான நிலைய முனையம் திறப்பு விழா, வந்தே பாரத் ரயில் துவக்க விழா ஆகியவற்றில் உடன் இருப்பார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பல்லாவரம் அல்ஸ்டம் கிரிக்கெட் மைதானம் செல்லும் மோடி அங்கு மாலை 6.30-7.30 மணி வரை பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பணிகள் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்தும் வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பிரதமர் மோடி
    சென்னை
    மு.க ஸ்டாலின்

    பிரதமர் மோடி

    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி வந்தே பாரத்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு சென்னை
    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் இந்தியா
    ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி முதுமலை வருகிறார் சென்னை

    சென்னை

    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா
    சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது வந்தே பாரத்
    நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் பருவகால மாற்றங்கள்

    மு.க ஸ்டாலின்

    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் இலங்கை
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம் சென்னை
    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் சிவகங்கை
    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி பாஜக
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023