திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்
லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட ஏழு மடங்கு அதிக விலைக்கு திப்பு சுல்தானின் வாள் விற்கப்பட்டதாக, இந்த விற்பனையை ஏற்பாடு செய்த ஏல நிறுவனம் போன்ஹாம்ஸ் கூறியுள்ளது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த போர்களால் திப்பு சுல்தான் புகழ் பெற்றார். அவர் 1175 மற்றும் 1779க்கு இடையில் பல போர்களில் மராட்டியர்களுக்கு எதிராக போராடினார். திப்பு சுல்தான் தனது ராஜ்யத்தை வெறித்தனமாக பாதுகாத்தற்காக அவருக்கு "மைசூர் புலி" என்ற செல்லப்பெயர் வழங்கப்பட்டது. திப்பு சுல்தான் அரண்மனையின் தனிப் பகுதியில் இந்த வாள் கண்டெடுக்கப்பட்டதாக ஏல நிறுவனம் கூறியுள்ளது.
பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களில் மிக முக்கியமானவை
கோஹினூர் வைரம் 21.6 கிராம் எடையுள்ள கோஹினூர், தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் வெட்டப்பட்டு, முகலாயப் பேரரசர்களின் மயில் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த உலகின் மதிப்புமிக்க வைரமாகும். இது தற்போது இங்கிலாந்து அரச குடும்பத்திடம் உள்ளது. திப்பு சுல்தானின் மோதிரம் 41.2 கிராம் கொண்ட திப்பு சுல்தானின் மோதிரம் 2014இல் பிரித்தானியரால் ஏலமிடபட்டு £145,000க்கு வாங்கப்பட்டது. இந்த ரத்தின மோதிரத்தில் இந்து கடவுளான ராமரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். ஷாஜகானின் மது கோப்பை பேரரசர் ஷாஜகானுக்கு சொந்தமான வெள்ளை ஜேட் ஒயின் கோப்பை ஒன்றும் பிரிட்டனில் இருக்கிறது. 1962 முதல் இது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.