NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு 
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு 

    எழுதியவர் Nivetha P
    Apr 17, 2023
    06:41 pm
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு 
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு

    திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார். இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விரிவான விசாரணையினை மேற்கொண்டார். பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்ட 15 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்கள். இந்நிலையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் குற்றச்சட்டுக்குள்ளான பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    2/2

    பல்வீர் சிங்கின் கைது நடவடிக்கை குறித்த தகவல் 

    அதன்படி தற்போது கொடுங்காயங்களை ஏற்படுத்துதல், குற்றவியல் மிரட்டல், மரணத்தினை விளைவிக்கும் வகையில் ஆயுதம் கொண்டு தாக்குதல் போன்ற ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது முன்னாள் ஏஎஸ்பி அதிகாரியான பல்வீர் சிங்கை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையிடம் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேட்டியளித்துள்ள நிலையில், பல்வீர் சிங்கின் கைது நடவடிக்கை நிச்சயம் ஒரு எடுத்துக்காட்டாக நிலைக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருநெல்வேலி
    காவல்துறை
    காவல்துறை

    திருநெல்வேலி

    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  கோவில்கள்
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  காவல்துறை
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்  காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு மனித உரிமைகள் ஆணையம்

    காவல்துறை

    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  தமிழ்நாடு
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  சென்னை
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது இந்தியா

    காவல்துறை

    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் சென்னை
    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023