NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார் 

    திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 03, 2024
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொள்ளையடிக்க ஒரு வீட்டிற்கு நுழைந்து அந்த வீட்டின் மாடியில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த திருடனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    போலீஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் அதிக குடிபோதையில் இருந்ததால், ACயை கண்டவுடன் அதை போட்டுவிட்டு நன்றாக தூங்கிவிட்டார்.

    நேற்று அதிகாலை லக்னோவின் இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அந்த வீடு வாரணாசியில் பணிபுரியும் டாக்டர் சுனில் பாண்டே என்பவருக்கு சொந்தமானதாகும். மேலும், சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்தனர். வீடு காலியாக இருப்பதை அறிந்துகொண்ட அந்த நபர் வீட்டின் முன் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தார்.

    லக்னோ 

    குடிபோதையில் தலையணை வைத்து தூங்கிய திருடன் 

    அந்த வீட்டிற்குள் நுழைந்த அவர், ஏசியை பார்த்தவுடன் அதை போட்டுவிட்டு, அங்கே ஒரு தலையணையை தலையில் வைத்து படுத்துவிட்டார்.

    அதிக குடிபோதையில் இருந்ததால் அவர் படுத்தவுடன் நன்கு தூங்கிவிட்டார். போலீசார் வரும் வரை எழுந்திருக்கவில்லை.

    இதற்கிடையில், வீட்டின் முன் கேட் திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால், அப்போது அவர் லக்னோவில் இல்லாததால் அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, ​​அந்த நபர் ஏசியை ஆன் செய்துவிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

    அப்போது போலீசார் எடுத்த திருடனின் புகைப்படம், வலது கையில் மொபைலை வைத்துக்கொண்டு அந்த திருடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

    இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    வாரணாசி

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு
    வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி  இந்தியா
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    வாரணாசி

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு  தொல்லியல் துறை
    ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது தொல்லியல் துறை
    ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள்  தியானம்
    ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025