NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள்
    விபச்சாரக் குற்றங்களுக்கான விதி இந்த புதிய மசோதாவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 12, 2023
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டம் பேசுவோம்: இந்தியாவில் புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களவையில் 3 மசோதாக்களை மத்திய-அரசு தாக்கல் செய்துள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்காக புதிய மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    1860ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்திற்கு(IPC) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா(BNS) என்ற சட்டத்தை இயற்ற ஒரு மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த மசோதாவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு(CrPC) மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023 என்ற மசோதாவும், இந்திய சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய சாக்ஷ்ய-2023 என்ற மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

    டவ்ஹ்க்கி

    எத்தனை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

    IPCக்கு மாற்றாக வந்திருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில், IPCயில் இருக்கும் 22 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 175 விதிகளில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், 8 புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    CrPCக்கு மாற்றாக வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதாவில், CrPCயில் இருக்கும் 7 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 160 விதிகளில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், 9 புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்திய சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக வந்திருக்கும் பாரதிய சாக்ஷ்யா மசோதாவில், சாட்சியச் சட்டத்தில் இருக்கும் 5 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 23 விதிகளில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், 1 புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    டிஓ

    பொய் கூறி பெண்களுடன் உடலுறவு கொண்டால் 10 ஆண்டுகள் சிறை 

    இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய அமித்ஷா தனது உரையின் போது, ​​இந்த மசோதா தேசத்துரோக குற்றத்தை முழுமையாக நீக்குகிறது என்றார்.

    எனினும், பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் "அரசுக்கு எதிரான குற்றங்கள்" என்ற விதிகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

    இந்த மசோதாவின் 150வது பிரிவு, "இந்தியாவின் இறையாண்மை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டங்கள்" பற்றிக் கூறுகிறது.

    மேலும், இந்த புதிய மசோதாவின் படி, கும்பலாக சேர்ந்து கொலை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

    இந்த மசோதாவின் படி, பொய்யான அடையாளங்களை காட்டி பெண்களுடன் உடலுறவு கொண்டால் அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    நைவு

    திருமண பலாத்காரத்திற்கு எதிரான விதிகள் இல்லை 

    எனினும், இந்த புதிய மசோதாவும் திருமண பலாத்காரத்தை ஆதரிக்கிறது.

    "பதினெட்டு வயதை தாண்டிய தன் மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல" என்று இந்த பாரதிய நியாய சன்ஹிதா மசோதா கூறுகிறது.

    குற்றவியல் நீதி அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் 313 திருத்தங்கள் இந்த மசோதாவில் முன்மொழிப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கையை வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சிறு திருட்டு, அவதூறு உள்ளிட்ட சிறு குற்றங்களுக்கு இனி சமூக சேவை ஒரு தண்டனையாக விதிக்கப்படலாம் என்று இந்த புதிய மசோதா கூறுகிறது.

    கிவி

    ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்த தண்டனையும் முன்மொழியப்படவில்லை

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதாவின் படி, போலி செய்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

    இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இனி அனைத்து வகையான கூட்டுப் பலாத்காரங்களுக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். சிறார் பலாத்காரத்திற்கு மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

    விபச்சாரக் குற்றங்களுக்கான விதி இந்த புதிய மசோதாவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

    ஒரு ஆணுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்த தண்டனையையும் முன்மொழியப்படவில்லை.

    பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் ஆண்களுக்கு சாதகமாக இருந்த சட்டப்பிரிவு 377 என்பதும் புதிய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மக்களவை
    சட்டம் பேசுவோம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது? உலகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 7 தங்கம் வெள்ளி விலை
    ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 54 பேருக்கு பாதிப்பு  கொரோனா

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    சட்டம் பேசுவோம்

    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025