NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வளிமண்டல சுழற்சி மெல்ல அரபிக்கடல் பக்கம் நகர்கிறது - தமிழ்நாடு வெதர்மேன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வளிமண்டல சுழற்சி மெல்ல அரபிக்கடல் பக்கம் நகர்கிறது - தமிழ்நாடு வெதர்மேன் 
    வளிமண்டல சுழற்சி மெல்ல அரபிக்கடல் பக்கம் நகர்கிறது - தமிழ்நாடு வெதர்மேன்

    வளிமண்டல சுழற்சி மெல்ல அரபிக்கடல் பக்கம் நகர்கிறது - தமிழ்நாடு வெதர்மேன் 

    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை கனமழை புரட்டி போட்டது.

    குறிப்பாக காயல்பட்டினத்தில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது.

    95செ.மீ.,மழை பதிவு என்பது கனவிலும் நினைத்து பார்க்காத மழை பொழிவு.

    இத்தகைய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து ரெட் அலெர்ட் கொடுத்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

    மழை பாதிப்பால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விடுமுறை இன்றும்(டிச.,19) அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை 

    சென்னையில் வறண்ட வானிலை நிலவும் என்று தகவல் 

    மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட் அலெர்ட் தெரிவிக்கப்பட்டிருந்த பட்சத்தில் இன்று கனமழையானது ஓரளவு குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் மழை குறித்த ஓர் பதிவினை செய்துள்ளார்.

    அதில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழைக்கு காரணமாக இருந்த வளிமண்டல சுழற்சி தற்போது மெல்ல அரபிக் கடல் நோக்கி நகர துவங்கியுள்ளது.

    இதன் காரணமாக மழை பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை தீவிரப்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர், 'ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று லேசான மழை வாய்ப்புள்ளது' என்றும்,

    'சென்னையில் வறண்ட வானிலை நிலவும்' என்றும் பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    வெதர்மேன் ரிப்போர்ட் 

    The circulation which gave historic rains (Thoothukudi and Nellai) and which will be spoken for ages moves away and so does the rains. Relief works to take centre stage now.

    Vedaranayam, Kodiyakarai to Rameswaram might get some rains today.

    Chennai dry weather to continue. pic.twitter.com/tuAHBvB9tE — Tamil Nadu Weatherman (@praddy06) December 19, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெதர்மேன்
    கனமழை
    வெள்ளம்
    மீட்பு பணி

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்

    வெதர்மேன்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி மன அழுத்தம்
    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! தமிழ்நாடு
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    கனமழை

    மிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது? சென்னை
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை  சென்னை
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்  சென்னை மாநகராட்சி

    வெள்ளம்

    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்: 54 பேர் பலி உத்தரகாண்ட்
    கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி  ஹிமாச்சல பிரதேசம்
    லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் லிபியா
    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம் சிக்கிம்

    மீட்பு பணி

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025