
கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி, 3 வீடுகள் தரைமட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழகம்: கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை அருகே உள்ள ஒரு பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால், 4க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் இருந்த 10 பேர் காயமடைந்தனர்.
பட்டாசு குடோனுக்கு அருகில் இருந்த 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருக்கிறது.
முதற்கட்ட தகவலின்படி, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு வீரர்கள், மளமளவென பரவி கொண்டிருக்கும் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.
கடந்த மாதம், சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பட்டாசு குடோனில் தீ விபத்து: 4 பேர் பலி
பட்டாசு குடோனில் தீ விபத்து: 4
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 29, 2023
பேர் பலி#Krishnagiri #fireaccident #News18TamilNadu pic.twitter.com/dLiTSgwYGl