அடுத்த செய்திக் கட்டுரை

தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு - சுற்றுலா வளர்ச்சித்துறை கழகம்
எழுதியவர்
Nivetha P
Mar 16, 2023
12:34 pm
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் முட்டுக்காடு கடற்கரை, பூண்டி அணைக்கட்டு, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி போன்ற இடங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல் தென்காசி குண்டாறு அணை, கரூர் பொன்னையாறு, போன்ற தமிழகத்தில் உள்ள பல சுற்றுலாத்தலங்களை தமிழக அரசு மேம்படுத்த உள்ளது என முன்னதாகவே செய்திகள் வெளியானது.
2022-23 சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது என்று தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு
#JUSTIN | சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு #TouristPlace | #TNGovt pic.twitter.com/WGrZrJ721o
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 16, 2023