
தமிழகத்தில் வெப்பநிலை உயர்வு; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு, சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது அசவுகரியங்களை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டல கீழடுக்கு மற்றும் கிழக்கு-மேற்கு திசை காற்று சந்திப்பால், தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய மழை பதிவுகள்: சிவகாசி (விருதுநகர்) - 5 செ.மீ வால்பாறை (கோவை) - 4 செ.மீ உபாசி, கோத்தகிரி (நீலகிரி), குண்டேரிபள்ளம் (ஈரோடு), கோவில்பட்டி (தூத்துக்குடி - தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை
தமிழகத்தில் அதிகாரிக்கு வெப்பநிலை
நேற்றைய நிலவரப்படி, தமிழத்தில் பல இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமான நிலையம், வேலூர் -40°C, சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, திருத்தணி-38°C மேல் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 6 நாட்களுக்கு, அதாவது ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 26 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எனினும், வெப்பநிலை வழக்கத்தை விட 5°F (சுமார் 3°C) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை 28°C-37°C வரை இருக்கும் எனவும் IMD தெரிவிக்கிறது.