
பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்கள்: கேள்வி எழுப்பிய பள்ளி ஊழியர்கள் மீது தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானாவின் மன்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த்தால் அப்பள்ளியின் முதல்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனையடுத்து, அப்பள்ளிக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.
ஹைதராபாத்தில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள கன்னேபள்ளி கிராமத்தில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரசா உயர்நிலைப் பள்ளியின் அதிகாரிகள், கேரளாவைச் சேர்ந்த முதல்வர் ஜெய்மோன் ஜோசப், இரண்டு நாட்களுக்கு முன்பு சில மாணவர்கள் காவி உடை அணிந்து பள்ளிக்கு வந்ததை கவனித்ததாகக் கூறியுள்ளனர்.
தெலுங்கானா
பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு
இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது, தாங்கள் 21 நாள் அனுமன் தீக்ஷையை கடைப்பிடிப்பதால் காவி உடை அணிதிருப்பதாக அவர் பதிலளித்திருக்கின்றனர்.
இதைப் பற்றி பேசுவதற்கு, அவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு முதல்வர் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், யாரோ ஒருவர் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, பள்ளி வளாகத்தில் இந்து உடையை அனுமதிக்கவில்லை என்று கூறியதால் விஷயம் கையை மீறியது.
அதன் பின், அந்த பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.