Page Loader
வீடியோ: தெலுங்கானாவில் பறந்து வந்து மற்றொரு வாகனம் மீது மோதிய கார் 

வீடியோ: தெலுங்கானாவில் பறந்து வந்து மற்றொரு வாகனம் மீது மோதிய கார் 

எழுதியவர் Sindhuja SM
Feb 27, 2024
02:35 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டையில் இருந்து ஹைதராபாத் நோக்கி வேகமாகசென்று கொண்டிருந்த கார் ஒன்று டிவைடரில் மோதி மற்றொரு காரை மோதியதால் 4 பேர் காயமடைந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை டிவைடரில் மோதி எதிர்புறத்தில் வந்த மற்றொரு கார் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. டிவைடரில் மோதிய வேகத்தில் அந்த கார் பறந்து சென்று மற்றொரு கார் மீதும் மோதும் சம்பவம் தெளிவாக அந்த வீடியோவில் தெரிகிறது. இந்த விபத்தினால் இரண்டு கார்களும் சேதமடைந்தன. இதனால் நான்கு பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த விபத்தின் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகி வரும் வீடியோ காட்சி