LOADING...
மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த போவதாக ஒரு செய்தி உலவி வருகிறது

மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 06, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

சில மாதங்களுக்கு முன்னர் தான், தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற செய்தி உலவி வருகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இரண்டிற்குமான மின்சார கட்டணம் 12 % - 15 % வரை உயர்த்தப்பட்டது. அதோடு, மின்சார ஒழுங்கு முறை வாரியம், 2027 ஆண்டு வரை, ஆண்டுதோறும், மின்சார கட்டணத்தை முறைப்படுத்தவும் அனுமதி அளித்துள்ளதால், தற்போது நிலவி வரும் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு, ஆளும் தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்?