சோலார், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை
கிரீன் எனர்ஜி என்றழைக்கப்படும் மாற்று மின்சார உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி உற்பத்தியில் தமிழகம் இதுவரை இல்லாத அளவு உற்பத்தி செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சூரிய ஒளியிலிருந்து 8,574 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம் 100 மெகாவாட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சூரிய சக்தி மின் உற்பத்தியின் அளவு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 5,648 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல காற்றாலை மின் உற்பத்தியும் மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் இது 78.115Muஆக இருந்தது எனக்கூறப்பட்டுள்ளது