
ஆளுநர் மாளிகை குண்டுவெடிப்பு: தமிழக காவல்துறை வெளியிட்ட ஆதார வீடியோ
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில், இரு தினங்களுக்கு முன்னர், `கருக்கா' வினோத் என்ற பெயர் கொண்ட நபர், பெட்ரோல் குண்டுகளை வீசியது, தமிழ்நாட்டையே பரபரக்க செய்தது.
பெட்ரோல் குண்டுகள் வீசிய அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தமிழக காவல்துறையிடம் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாயின.
அந்த புகாரில், பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசியதாகவும், வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாருக்கு, நேரடியாக ஆளுநரிடம் நேற்று விளக்கம் அளித்தார் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்.
card 2
பத்திரிகையாளர்களை சந்தித்த காவல்துறை உயரதிகாரிகள்
இந்த நிலையில், இன்று, பத்திரிகையாளர்களை நேரடியாக சந்தித்தனர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் ஆகியோர்.
அப்போது, சம்பவம் நடந்த அன்று எடுக்கப்பட்ட CCTV பதிவுகளை காண்பித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து பேசிய, காவல் துறை ஆணையர் சந்தீப் ரத்தோர், "கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கமான குற்றவாளி. தேனாம்பேட்டையில் இருந்து சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி தன்னந்தனியாக பாதசாரி போல நடந்து வந்தது சிசிடிவி மூலமாக தெரிகிறது. ஆனால் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய கருக்கா வினோத் முயற்சிக்கவில்லை" எனக்கூறினார்.
card 3
பொய் தகவலை அளித்த ஆளுநர் மளிகை
"தான் கொண்டுவந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட 4 பாட்டில்களில், இரண்டு பாட்டில்களை சர்தார் படேல் சாலையில் எதிர்புறத்தில் இருந்து எரிய முற்பட்டபோது, அவை ஆளுநர் மாளிகைக்கு அருகே உள்ள பேரிகேட் அருகே விழுந்தன. ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை" என்று சந்தீப் ரத்தோர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,"குற்றவாளி வினோத், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்லவும் இல்லை, ஆளுநர் மாளிகை ஊழியர்களால் அவர் பிடிக்கப்படவும் இல்லை. வினோத் தனியாகதான் வந்துள்ளார். அவருடன் யாரும் வரவில்லை. சென்னை பெருநகர காவல்துறை காவலர்கள் 5 பேரால் உடனடியாக பிடிக்கப்பட்டு கிண்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுதான் நடந்த சம்பவம். ஆனால், ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் குறிப்பிட்டது போல நடக்கவில்லை" எனக்கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
ராஜ் பவனின் அறிக்கை
ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்.@pibchennai
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 25, 2023
ட்விட்டர் அஞ்சல்
ஆளுநர் அறிக்கை
Press Release No: 71 pic.twitter.com/FofY87mJZO
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 25, 2023
ட்விட்டர் அஞ்சல்
தமிழக காவல்துறை வெளியிட்ட ஆதார வீடியோ
#WATCH | "ஆளுநர் மாளிகைக்கு அளிக்கும் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாக இதுவரை அவர்கள் எந்த புகாரும் தரவில்லை”
— Sun News (@sunnewstamil) October 27, 2023
-ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காவல்துறை விளக்கம்#SunNews | #RNRavi | #Rajbhavan | #TNPolice | @tnpoliceoffl pic.twitter.com/5Yss2izx8T