தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னையில் பரபரப்பு
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த நபரால் இந்த குண்டு வீசப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த நபரை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் சென்னை தேனாம்பேட்டை பகுதியினை சேர்ந்த வினோத் என்பதும், தான் சிறையில் இருந்தப்பொழுது வெளியில் வர அனுமதியளிக்காத காரணத்தினால் இவ்வாறு செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட வினோத்திடமிருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.