Page Loader
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது
மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2024
10:01 am

செய்தி முன்னோட்டம்

இஸ்லாமிய மதத்தின் புனித நாளான இந்த ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் ரமலான் பிறை தெரியாத காரணத்தால், இன்று கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி நேற்று முன்தினம் அறிவித்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், த.வெ.க தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

embed

ரம்ஜான் பண்டிகை

#JUSTIN | சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் ரம்ஜான் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் பங்கேற்று, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.#SunNews | #Ramadan pic.twitter.com/hcBD6LAu8o— Sun News (@sunnewstamil) April 11, 2024

embed

நடிகர் விஜய்

புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். விஜய், தலைவர், தமிழக வெற்றிக் கழகம்— TVK Vijay (@tvkvijayhq) April 11, 2024