தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றும் நாளையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மழை முன்னறிவிப்பு
மாவட்ட வாரியாக மழை முன்னறிவிப்பு
செப்டம்பர் 27 முதல் 29 வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 30 & அக்டோபர் 1 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.