Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Dec 25, 2023
03:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு: டிசம்பர் 25 முதல் டிசம்பர் 27 வரை தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 28 தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

டல்ட்ஜ்

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை.