Page Loader
"பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன்": அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ 

"பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன்": அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ 

எழுதியவர் Sindhuja SM
May 29, 2024
09:42 am

செய்தி முன்னோட்டம்

மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று அவரது மகன் உறுதி செய்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ இன்று தனது தந்தையின் உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த விபத்து கடந்த சனிக்கிழமை இரவு நடந்ததாகவும், எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை தேவை என்றும் துரை வைகோ கூறியுள்ளார். விபத்திற்கு பிறகு உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வைகோ, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகம் 

"யாரும் பயப்பட வேண்டாம்": வைகோ 

இந்நிலையில் ஒரு வீடியோ செய்தியை இன்று வெளியிட்ட வைகோ, அனைவரின் நல்வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அந்த வீடியோவில், தனது அறுவை சிகிச்சை சிறியது என்றும், அதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் வைகோ கூறியுள்ளார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு எனது செயல்பாடுகள் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். நான் நலமுடன் வருவேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோவும் சமூக ஊடகங்களில் தனது தந்தை நல்ல மனநிலையில் இருப்பதாகவும், பயப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இன்று ஆபரேஷன் நடக்க உள்ளதாக வைகோவின் மகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.