திருமணத்திற்கு 1 பவுன் தங்கம் + பட்டுச்சேலை: அண்ணன் சீர் திட்ட அரசாணை வெளியீடு, தகுதிகள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அண்ணன் சீர் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறும் நிலையில், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மணப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
திட்டத்தின் சிறப்பம்சங்கள் & உதவிகள்
தகுதியான மணப்பெண்களுக்கு 8 கிராம் (1 பவுன் - 22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை அன்பு பரிசாக வழங்கப்படும்.
தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்டம், 1998-ன் படி வெளிப்படையான முறையில் ஒப்பந்தம் கோரப்பட்டுத் தங்கம் மற்றும் புடவைகள் கொள்முதல் செய்யப்படும்.
தங்க நாணயத்தின் கொள்முதல் விலை, ஆர்டர் வழங்கப்படும் நாளில் 'IBJA' (India Bullion and Jewellers Association) அமைப்பால் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
தகுதிகள்
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
முன்னதாக தேர்தல் வாக்குறுதியில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசாணையில் ரூ.2.5 லட்சமாக வருமான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது பலரிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வழிமுறை
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டம் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.