Loading...
குழந்தைகள் தினத்திற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

குழந்தைகள் தினத்திற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
12:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் கேக் வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, 4 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகள் ரூ.7.54 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

கடுமையான தரக் கட்டுப்பாடுகள்

மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதன்படி, ஒரு கேக் துண்டு 45 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும்.

கேக்குகள் கொள்முதல் செய்யப்படும் போது, அதன் மொத்த காலாவதி காலத்தில் குறைந்தது 30 நாட்கள் மீதமிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT