Page Loader
சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

எழுதியவர் Nivetha P
Oct 28, 2023
02:51 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017ம் ஆண்டு திமுக கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றார். அதனையடுத்து, 2021ம் ஆண்டு தமிழ்நாடு மாநில முதல்வராக பதவியேற்ற பின்னர் தன்னை சந்திக்க வருவோர் பூங்கொத்து, மாலைகள், சால்வைகள் போன்றவைகளை கொடுப்பதற்கு பதிலாக அன்பை வெளிக்கொணரும் வகையில் புத்தகங்களை வழங்குமாறு ஓர் வேண்டுகோளை வைத்திருந்தார். அதனை ஏற்ற பலரும் முதல்வரை சந்திக்க செல்கையில் புத்தகங்களை வாங்கி சென்று கொடுத்தனர். அவ்வாறு அவருக்கு கொடுக்கப்பட்ட சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான புத்தங்களை அவர் தன்னிடம் புத்தகங்கள் கேட்டு கடிதம் அனுப்பியவர்களுக்கும், பல நூலகங்களுக்கும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

புத்தகம் 

புத்தக நன்கொடைக்கான ஆணை வழங்கப்பட்டது 

இதனிடையே, சிறை கைதிகளை நல்வழி படுத்தும் நோக்கில் அண்மை காலத்தில் சிறை நூலகங்கள் அமைக்கப்பட்டு தற்போது அது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று(அக்.,28) சிறை கைதிகளின் நலனுக்காக நடத்தப்படும் சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இது தொடர்பான ஆணை முதல்வர் கையால் உள்துறை செயலாளர் அமுதாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் பொழுது சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, சட்டத்துறை அமைச்சரான ரகுபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் நன்கொடையாக பெறப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்திலுள்ள 16 மாவட்டச்சிறைகள், கிளை சிறைகள், 10 மத்திய சிறைச்சாலைகள் என 140க்கும் மேலான சிறைகளுக்கு பகிரப்பட்டு கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது.