Loading...
முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்: 70 வயது மேற்பட்டோருக்கு இலவச மருத்துவச் சிகிச்சை
வருமான வரம்பும் இன்றி இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் 'முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்'

முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்: 70 வயது மேற்பட்டோருக்கு இலவச மருத்துவச் சிகிச்சை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2026
11:49 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் முதியோர்களுக்கு எவ்வித வருமான வரம்பும் இன்றி இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் 'முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்' தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சுகாதாரத்துறை சார்பில் 115 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்பான இத்திட்டம், 70 வயதைக் கடந்த தமிழக குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும். முதியோர்களுக்கான மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், வருமான வரம்பு காரணமாக அரசு நிதியுதவி பெறும் திட்டங்களில் இருந்து தகுதியானவர்கள் விடுபடுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் ஆலோசனைகள்

இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகை, சேர்க்கப்பட்டுள்ள சிகிச்சைகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் கோரிக்கை நடைமுறைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் அரசிடமிருந்து வெளியாகும்.

அரசு அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை வெளியிடும் வரை, ஏற்கனவே தனியார் மருத்துவக் காப்பீடு வைத்திருக்கும் முதியோர்கள் தங்களது காப்பீட்டைத் தொடர்ந்து வைப்பது பாதுகாப்பானது.

1939-ஆம் ஆண்டின் பழைய பொது சுகாதாரச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

இது தவிர மேலும் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

12 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மனநலத் திட்டத்திற்காக ₹26.87 கோடியும், மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க 'TN MediCity' அமைக்க ஆரம்பக் கட்டமாக ₹10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT