NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு பட்ஜெட் 2024இல் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு பட்ஜெட் 2024இல் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்? 

    தமிழ்நாடு பட்ஜெட் 2024இல் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்? 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 18, 2024
    07:37 pm

    செய்தி முன்னோட்டம்

    2024-2025ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 19ஆம் தேதி(நாளை) தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 20-ம் தேதி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசு தொடர்பான பிற செயல்பாடுகளுடன் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

    பிப்ரவரி 21-ம் தேதி, துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்காக சட்டசபை கூட உள்ளது. அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    கூடுதலாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டும் காலை மற்றும் மாலை அமர்வுகளில் நடைபெறும்.

    தமிழகம்

    சமையல் எரிவாயு மானியம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு 

    இந்நிலையில், சமூகத்தின் பல்வேறு துறைகளை பாதிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளன.

    ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகளில் 'புதுமை பெண்' திட்டத்தின் நீட்டிப்பும் உள்ளது.

    அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அவர்களின் உயர்கல்வியைத் தொடர மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

    இந்த முன்முயற்சியின் சாத்தியமான விரிவாக்கம் குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன.

    தேர்தல் வாக்குறுதிகளுக்கு இணங்க, சமையல் எரிவாயு மானியம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும் இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகம்

    பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தபடுமா?

    அரசாங்கத்தின் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

    மேலும், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதத்திற்கு ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று பேசப்படுகிறது.

    பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து சேவைகள் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்களின் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

    அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொடர் கோரிக்கை, கணிசமான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பட்ஜெட்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    தமிழ்நாடு

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி  உணவு பாதுகாப்பு துறை
    தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  கனமழை
    ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
    சென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்  சென்னை

    பட்ஜெட்

    இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்? ஆட்டோமொபைல்
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து நாடாளுமன்றம்
    பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் சிறப்பம்சங்கள் குடியரசு தலைவர்
    இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன? நிதியமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025