NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
    மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
    இந்தியா

    மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

    எழுதியவர் Sindhuja SM
    August 27, 2023 | 10:55 am 0 நிமிட வாசிப்பு
    மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
    இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    2023ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 2 ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல், ஒவ்வொரு ஆசிரியர் தினத்திற்கும் இந்தியாவில் சிறப்பாக பணிபுரிந்து சேவையாற்றிய 50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும். இந்நிலையில், இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதில் இருந்தும் 50 ஆசிரியர்கள் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் விருதை பெற இருக்கும் ஆசிரியர்கள் 

    மதுரை அலங்காநல்லூர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்து வரும் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்ற ஆசிரியருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் மாலதி என்ற ஆசிரியைக்கும் இந்த வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற இருக்கும் விழாவில் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படும். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு இந்த விருதை வழங்குவார். இது தவிர, மாநில அரசு சாரிப்பில், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 385 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    திரௌபதி முர்மு

    தமிழ்நாடு

    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம் சென்னை
    'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்  மு.க ஸ்டாலின்
    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை மு.க ஸ்டாலின்

    திரௌபதி முர்மு

    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மதுரை
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் டெல்லி
    குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது? நாடாளுமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023