அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு
பாஜக தலைமயில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று அறிவித்துள்ளார். இந்தியாவின் மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்தது, அந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், பிற கூட்டணி கட்சிகளின் உதவியோடு அக்கட்சி ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்று கொண்டார். நேற்று இதற்காக நடத்தப்பட்ட பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியை தவிர, பல பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அமைச்சர்களாகவும், இணை அமைச்சர்களாகவும் பதிவியேறினார்.
கேரளாவில் உள்ள ஒரு தொகுதியில் முதல்முறையாக வெற்றி பெற்ற பாஜக
மக்களவைத் தேர்தலில், பிரபல மலையாள நடிகரும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றார். கேரளாவின் திருச்சூரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.எஸ் சுனில் குமாருக்கு எதிராக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேரளாவில் உள்ள ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், மலையாள நடிகரும் பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி இணை அமைச்சராக பதவியேற்று கொண்டார். ஆனால், அந்த பதவி தனக்கு வேண்டாம் என்று தற்போது அவர் அறிவித்துள்ளார். பல திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால் அமைச்சர் பதவியை தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.