Page Loader
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம் 
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம் 

எழுதியவர் Nivetha P
May 18, 2023
12:04 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பாலா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் அந்தந்த மாநில அரசுகள் நடத்துவதற்கு சிறப்பு சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாக கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் பீட்டா போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன. இந்த வழக்குகள் குறித்த விசாரணை 5நீதிபதிகள் அமர்வுமுன்பு நடந்தது. அப்போது, 5ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு தமிழகக்கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகும். கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாட்டுமாடு இனங்களை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது என்று தமிழ்நாடுஅரசு வாதிட்டது. கடந்த டிசம்பர் மாதம் இதன் இறுதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முக்கிய வழக்காக கருதப்படும் இந்த வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இன்று(மே.,18)வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post