Page Loader
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 
விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 

எழுதியவர் Sindhuja SM
Sep 05, 2023
05:45 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 5) ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 16 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு தனது உத்தரவை ஒத்திவைத்துள்ளது. கடந்த மாதம் முதல், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்ததது. ஆகஸ்ட் மாதம் நடந்த விசாரணையின் போது, ​​​​மத்திய அரசு தனது சொந்த நலனுக்காக எல்லாவற்றையும் செய்கிறது என்றும் நாட்டின் விதியை கடைபிடிக்கவில்லை என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.

டவ்க்ள்

'அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்ய முடியாது': மனுதாரர்கள்

மனுதாரர் ரிஃபாத் ஆர் பட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது "அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஒரு உன்னதமான உதாரணம்" என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அக்பர் லோன் மற்றும் ஹுசைன் மசூதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்று வாதிட்டார். ஆனால், இந்த குற்றசாட்டுகளை எல்லாம் மறுத்த மத்திய அரசு, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவாக வாதிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய விதியை ரத்து செய்வதில் "அரசியலமைப்பு மோசடி" இல்லை என்று மத்திய அரசு கூறியது. இந்நிலையில், இன்று இதற்கான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.