
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று முன்னர் ஏப்ரல் 9 முதல் 21 வரை திட்டமிட்டிருந்த தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 7 அன்று தமிழ், 8 அன்று விருப்ப மொழி, 9 அன்று ஆங்கிலம், 11 அன்று கணித பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
மேலும், 4 மற்றும் 5ஆம் வகுப்பினருக்கு 15 அன்று அறிவியல் மற்றும் 17 அன்று சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
ஏப்ரல் 18 முதல் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடக்கும் என அறிவிப்பு
— Sun News (@sunnewstamil) March 30, 2025
வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது#SunNews | #TNSchools | #AnnualExams | #Summer pic.twitter.com/ROA66iEPjo