 
                                                                                தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை திடீர் உயர்வு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது ஆண்டுக்கு 600 டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இது தேவையை விட மிக குறைவு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து துவரம் பருப்பானது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, தற்போது நடப்பாண்டினை சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதனையொட்டி மத்திய அரசு மற்றும் மாநில அரசு சிறுதானியங்களின் சாகுபடியினை அதிகரிக்க மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றிற்கு மாற்றாக விவசாயிகள் பலரும் சிறுதானிய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று தெரிகிறது. இதனால் விளைச்சல் குறைந்து துவரம் பருப்பின் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது.
ஆய்வு
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை
இச்சூழலை தங்களுக்கு வசதியாக எடுத்துக்கொண்ட ஆன்லைன் வியாபாரிகள் பல்லாயிர டன் துவரம்பருப்புகளை வாங்கி தங்கள் கிடங்குகளில் பதுக்கி வைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியானது. இதனிடையே, ஒரேவாரத்தில் கிலோக்கு ரூ.40உயர்ந்து, ஒரு கிலோ ரூ.160க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் பருப்பின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பருப்பு வகைகளின் பதுக்கலை கண்டறிந்து அதனை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தோடு கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிடங்குகளில் சோதனைகளை மேற்கொண்டார். ஆனால் அவர் தற்போது சென்னை மாநகர கமிஷனராக மாற்றப்பட்டுள்ளதால்,அவர் ஆரம்பித்த பணிகளை அதிகாரிகள் தொடரவேண்டும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பருப்புவகைகளின் விலை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.