Page Loader
11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம்
உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது சிறுவனின் தலையும் வலது கையும் துண்டிக்கப்பட்டிருந்தது.

11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம்

எழுதியவர் Sindhuja SM
Apr 11, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் உள்ள சாஸ்திரி நகர் இடைநிலைக் கல்லூரி மைதானத்தில் 11 வயது சிறுவன் தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆதர்ஷ் என்ற சிறுவன் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் தனது வீட்டிலிருந்து சந்தைக்குச் செல்வதற்காக புறப்பட்டான். அவன் ரொம்ப நேரமாக திரும்பி வராததையடுத்து அவனது குடும்பத்தினர் அவனை தேட ஆரம்பித்தனர். கடித்து குதறப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் நள்ளிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது சிறுவனின் தலையும் வலது கையும் துண்டிக்கப்பட்டிருந்தது.

details

ஹைதெராபாத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை 

சிறுவன் நாய்களை எதிரத்து சண்டை போட்டதற்கான அடையாளங்கள் உடலில் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாய்கள் கூட்டம் சிறுவனைத் தாக்கி கொன்றதாக இன்ஸ்பெக்டர் கோட்வாலி ரவி ராய் கூறியுள்ளார். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் ஹைதெராபாதிலும் நடந்தது. ஹைதெராபாத்தில் ஒரு ஐந்து வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறின. அந்த சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.