Page Loader
ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்
குடும்பத்தினர் இது குறித்து எந்த புகாரும் பதிவு செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்

எழுதியவர் Sindhuja SM
Feb 21, 2023
07:57 pm

செய்தி முன்னோட்டம்

ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டில் ஐந்து வயது சிறுவன் தெருநாய்களால் கடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரதீப் என்ற சிறுவன், பாதுகாப்புக் காவலாளியாக வேலை செய்யும் தனது தந்தையுடன் அவர் பணிபுரியும் ஹவுசிங்-சொசைடிக்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சிறுவன் ஹவுசிங்-சொசைட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது தெருநாய்கள் தாக்கியதால் பலத்த காயம் அடைந்தான் என்று கூறப்படுகிறது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தந்தை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவனை அழைத்துச் சென்றார். அங்கு, அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ட்விட்டர் அஞ்சல்

எச்சரிக்கை: மனதை நோகடிக்கும் அந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ