Page Loader
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு! 
சோழர் காலத்தை சேர்ந்த அனுமன் சிலையை மீட்டு தமிழ்நாட்டு போலீசிடம் ஒப்படைப்பு

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு! 

எழுதியவர் Siranjeevi
Apr 26, 2023
02:24 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நாட்டில் பழங்கால பொருட்களை பாதுகாப்பதிலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய பொருட்களை மீட்பதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 251 பழங்கால சின்னங்கள் மீட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு சிலையை மீட்டுள்ளனர். அதாவது ஆஸ்திரேலியாவில் சோழர் காலத்தை சேர்ந்த அனுமன் சிலையை மீட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கடத்தப்பட்டு இருக்கிறது. இதனை 2012 ஆம் ஆண்டு மீட்கப்பட்டு இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த தகவலை மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post