டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது ஆறு தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு பதிலாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகளை வாசித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று டெல்லியில் 'லோக்தந்திர பச்சாவ்' பேரணியை நடத்தினர். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் டெல்லியில் திரண்டிருந்த நிலையில், சுனிதா கெஜ்ரிவால், டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் தற்போது விசாரணை காவலில் உள்ள தனது கணவரின் கடிதத்தை வாசித்தார்.
கெஜ்ரிவால் அளித்த ஆறு முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு:
1. நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் 2. நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம் 3. ஒவ்வொரு கிராமத்திலும், சுற்றுப்புறங்களிலும் சிறந்த அரசுப் பள்ளிகளை உருவாக்குதல் 4. ஒவ்வொரு கிராமம் மற்றும் சுற்றுப்புறங்களில் மொஹல்லா கிளினிக்குகளை நிறுவுதல் 5. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்தல் 6. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குதல் 'ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்' என்று பெயரிடப்பட்ட இன்றைய பேரணியில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.