
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்
செய்தி முன்னோட்டம்
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டாட செல்வார்கள்.
இந்த பண்டிகை நாட்களில் ரயில்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த ஆண்டில் இந்த மாதத்தில் (அக்டோபர்) ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருகிறது.
ஆயுத பூஜை வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 12-ந்தேதி விஜயதசமி, 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக உள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Changes in Train Services
— DRM Salem (@SalemDRM) October 4, 2024
On 05 & 06 October, 2024
To facilitate engineering works.
Passengers, kindly Take Note.@GMSRailway @RailMinIndia pic.twitter.com/0igx0hOYDM
விவரங்கள்
சிறப்பு ரயில்களின் விவரங்கள்
வருகிற 11-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் 5 நாட்கள் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து) பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்.06190) செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 5 நாட்களும் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.24 மணிக்கும், கும்பகோணத்திற்கு 6.58 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 7.28 மணிக்கும், சீர்காழிக்கு 7.52 மணிக்கும், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்க ல்பட்டு வழியாக சென்னை தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு செல்லும்.